ADDED : செப் 09, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
கோவை: மாநகரின் முக்கிய அடையாளமாக டவுன்ஹால் மணிக்கூண்டு உள்ளது. மணிக்கூண்டு கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதிலுள்ள கடிகாரம் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு மணிக்கூண்டு புனரமைக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தின் உதவியுடன் மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. சில நாட்களாக மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் பழுதாகியுள்ளது.
நேரம் 3.25 மணியுடன் நிற்கிறது. கடிகாரம் வேலை செய்வதில்லை. மாநகராட்சி அலுவலகம் அருகிலேயே இருந்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை.
மணிக்கூண்டு பஸ் நிறுத்தத்தில் உள்ள கடிகாரமும் வேலை செய்வதில்லை. மணிக்கூண்டு எனும் பெயரில் அறியப்படும் மணிக்கூண்டிலேயே கடிகாரம் ஓடாமலிருப்பதை என்னவென்பது!
