UPDATED : அக் 16, 2026 07:06 PM
ADDED : அக் 16, 2026 07:03 PM

பெ.நா.பாளையம்: ‘நேர மேலாண்மை, ஒரு மனிதனை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்’ என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில், 64வது ஆண்டு விழா நடந்தது. யு.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம் பேசுகையில், ‘‘மாணவர்கள், பெரியோரிடத்தில் மதிப்பும், மரியாதையுடன் பழக வேண்டும். அவர்களுடைய ஆசிர்வாதம் மாணவர்களுக்கு அவசியம். நேர மேலாண்மையே ஒருவரின் தனித்துவம். அதுவே அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். மாணவர்கள், இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். காற்று, நீர், நிலம் ஆகியவற்றை மாசு படுத்தக்கூடாது. இயற்கைக்கு எப்போதும் நன்றி உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர், குழந்தைகளை பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. நேர்மறையான சிந்தனைகளை மாணவர்கள் வளர்த்துக் கொண்டால், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை சுலபமாக எட்ட முடியும்,’’ என்றார்.
பள்ளியின் தலைவர் துரைசாமி, செயலாளர் லதா ஜெகநாதன், யு.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் மைதிலி சண்முகம், மழலையர் பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி தாளாளர் சித்ரா பாலசுப்பிரமணியம், பள்ளியின் முன்னாள் மாணவர் பேராசிரியர் புவனேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
