/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க. எம்.பி. குற்றச்சாட்டு: திருப்பூர் கலெக்டர் மறுப்பு
/
தி.மு.க. எம்.பி. குற்றச்சாட்டு: திருப்பூர் கலெக்டர் மறுப்பு
தி.மு.க. எம்.பி. குற்றச்சாட்டு: திருப்பூர் கலெக்டர் மறுப்பு
தி.மு.க. எம்.பி. குற்றச்சாட்டு: திருப்பூர் கலெக்டர் மறுப்பு
ADDED : நவ 09, 2025 01:35 AM
திருப்பூர்: எஸ்.ஐ.ஆர்., திருத்த பணி தொடர்பான, தி.மு.க.வை சேர்ந்த எம்.பி., இளங்கோவின் குற்றச்சாட்டுக்கு, திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளருக்கான படிவங்களை வழங்கி வருகின்றனர். அவற்றை பூர்த்தி செய்த பிறகு, மீண்டும் வீடுகளுக்கு சென்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க., - எம்.பி., இளங்கோ, ''திருப்பூர் மாவட்டத்தில் சில தொகுதிகளில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கணக்கீட்டு படிவத்தை கொடுத்து, அடுத்த நாளே பூர்த்தி செய்து கொடுக்குமாறு வாக்காளரிடம் தெரிவித்துள்ளனர்,'' என, குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பணிகள் குறித்து, இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணைப்படி, வாக்காளருக்கு கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி, திருப்பூர் மாவட்டத்தில், நவ., 4ல் துவங்கி நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளருக்கு வழங்கும் படிவங்களை, பூர்த்தி செய்து மறுநாளே ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திரும்ப பெற வேண்டும் என்று எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படவில்லை.
எட்டு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பணி, இந்திய தேர்தல் கமிஷனின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, கால அட்டவணைப்படி நடந்து வருகிறது.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆளும்கட்சி எம்.பி.,யான இளங்கோவின் குற்றச்சாட்டுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலராகிய, திருப்பூர் கலெக்டர் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

