/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழித்தடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்; வாரப்பட்டி விவசாயிகள் கலெக்டரிடம் மனு
/
வழித்தடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்; வாரப்பட்டி விவசாயிகள் கலெக்டரிடம் மனு
வழித்தடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்; வாரப்பட்டி விவசாயிகள் கலெக்டரிடம் மனு
வழித்தடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்; வாரப்பட்டி விவசாயிகள் கலெக்டரிடம் மனு
ADDED : நவ 12, 2024 09:08 AM

கோவை ; விவசாயிகளுக்கான வழித்தடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சூலுார் தொகுதி எம்.எல்.ஏ.,கந்தசாமி தலைமையில் வாரப்பட்டி சுல்தான் பேட்டை விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
வாரப்பட்டி கிராமம் சுல்தான் பேட்டையில் 'டிட்கோ' சார்பில் ராணுவ தளவாட தொழில் நுட்ப பூங்கா பணிகளுக்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.
இச்சூழலில் விவசாயிகளுக்கு பாத்தியப்பட்ட க.ச.எண், 279 ல் தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ள பூமியின் வழியாக விவசாயிகளுக்கு பாத்தியப்பட்ட வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த வழித்தடத்தின் வழியாக செல்லும்விவசாயிகள் அன்றாட விவசாயப்பணிகளை மேற்கொள்கின்றனர். மேலும்கோழி, மாடு மற்றும் ஆடு வளர்ப்பு செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய விளைநிலங்களுக்கு செல்லும் பாதையை டிட்கோ நிறுவனம் கையகப்படுத்த உள்ளதாக விவசாயிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இவ்வழித்தடம் தவிர விவசாயிகளுக்கு பயன்படுத்த வேறு வழித்தடம் இல்லை. அதனால் விவசாயிகளின் பூமிக்கு செல்லும் பாதையில் எவ்வித இடையூறும் இல்லாமல் தொழிற்பூங்கா வழியாக தென்வடல் சாலையிலிருந்து கீழ்மேலாக, 40 அடி அகலத்தில் உள்ள பாதையை மறிக்க வேண்டாம். மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாரப்பட்டி சுல்தான் பேட்டையிலிருந்து சூலுார் தொகுதி எம்.எல்.ஏ.,கந்தசாமியுடன் ஏராளமான விவசாயிகள் திரண்டு கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.