/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் மின்வழித்தட பழுதை உடனே சரி செய்ய... 'டவர் வேகன் ஷெட்!' ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் நவீன கட்டமைப்பு
/
ரயில் மின்வழித்தட பழுதை உடனே சரி செய்ய... 'டவர் வேகன் ஷெட்!' ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் நவீன கட்டமைப்பு
ரயில் மின்வழித்தட பழுதை உடனே சரி செய்ய... 'டவர் வேகன் ஷெட்!' ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் நவீன கட்டமைப்பு
ரயில் மின்வழித்தட பழுதை உடனே சரி செய்ய... 'டவர் வேகன் ஷெட்!' ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் நவீன கட்டமைப்பு
ADDED : ஆக 23, 2024 12:57 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே வழித்தடங்கள், மின் மய மாக்கப்பட்ட நிலையில், திடீரென
பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யும் வகையில், 'ரயில்வே டவர் வேகன்
ெஷட்' அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, கடந்த, 1915ம் ஆண்டு, பொள்ளாச்சி - போத்தனுார் வரை மீட்டர்கேஜ் பிரிவாகமுதல் ரயில் சேவை துவங்கப்பட்டது. கடந்த, 2008ம் ஆண்டு, திண்டுக்கல் -போத்தனுார் அகல ரயில்பாதை பணிக்காக ரயில்வேஸ்டேஷன் மூடப்பட்டது.
அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்து, 2015ம் ஆண்டு மீண்டும் ரயில்சேவை துவங்கப்பட்டது. பொள்ளாச்சி - போத்தனுார் பாதை, 2017ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, பாலக்காடு டவுன் ஸ்டேஷன், 54 கி.மீ., தொலைவிலும், திண்டுக்கல் சந்திப்பு,121 கி.மீ., தொலைவிலும்அமைந்துள்ளன. பாலக்காடு - பொள்ளாச்சி, பொள்ளாச்சி - கோவை, பொள்ளாச்சி - திண்டுக்கல் அகல ரயில்பாதைகள், சில ஆண்டுகளுக்கு முன் மின்மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து, பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், பொள்ளாச்சி - கோவைக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் ரயில், மதுரை - கோவை ரயில், திருநெல்வேலி -மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பாலக்காடு - திண்டுக்கல் ரயில் பாதையில், திருச்செந்துார் ரயில், திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் கள் இயக்கப்படுகின்றன.
மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி ரயில் பொள்ளாச்சி வழியாக வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மின்தடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீர் பழுதுகளை நீக்கவும், 'டவர் வேகன் ெஷட்' என்ற ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை ஒதுக்கப்பட்டது.
தற்போது, பொள்ளாச்சிகோட்டூர் ரோடு மேம்பாலத் தின் கீழ் பகுதியில், பத்ரகாளியம்மன் கோவில் ரயில்வே கேட் அருகே, இந்த 'டவர் வேகன் ெஷட்'அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள், 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதற்கிந்த பணிமனை
பொள்ளாச்சி பகுதியில், 'டவர் வேகன் ெஷட்' அமைக்கப்பட்டுள்ளது. இதில், ரயில் பாதையில் இயங்கும் வகையிலான பராமரிப்பு ரயில் பெட்டி ஒன்று தயார் நிலையில் இருக்கும். இந்த ரயில் பெட்டி வாயிலாக நடுவழியில் ஏற்படும் திடீர் மின் தட பழுதுகளை எளிதாக சரி செய்ய முடியும்.
எலக்ட்ரோ ைஹட்ராலிக் பிளாட்பார்ம், லிப்டர்,மேல்நிலை கோடுகள் நிறுவ அல்லது ஆய்வு செய்யப்படும். பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியும். இதன் வாயிலாக, ரயில்களை தங்கு தடையின்றி குறித்த காலத்தில் இயக்க முடியும்.
இந்த பராமரிப்பு ரயில் பெட்டியை இருபுறமும் இயக்கலாம். இந்த ரயில் பெட்டி சிறிய பராமரிப்பு பணிமனை போல அமைக்கப்பட்டுள்ளது.
என்னென்ன வசதி
ஓட்டுநர் அறைகள், ஜெனரேட்டர், பராமரிப்பு தளவாட பொருட்கள் வைக்கும் பகுதி, நடுப்பகுதியில் மின்சார வயர்களை ஊழியர்கள் ஆய்வு செய்ய, மேலே செல்லும் வகையிலான ைஹட்ராலிக்ஏணி, ஊழியர்கள் அமரும் பகுதி உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.
மின்சார தாக்குதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ைஹட்ராலிக் ஏணியில் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே பணிமனை ஒவ்வொரு, 60 கி.மீ., துாரத்துக்கும் அமைக்கப்படுகின்றன. 25 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாயும் ரயில் மின்தடத்தில் பராமரிப்பு ரயில் பெட்டியை அனுப்பி, பாதிக்கப்பட்ட மின்தடத்தை சரி செய்ய முடியும். இதன் வாயிலாக ரயில் இயக்கம் தடைபடாமல் நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த பணிமனை ரயில்வே தண்டவாளத்துடன் இணைக்கவும் குறிப்பிட்ட கி.மீ., துாரத்துக்கு ரயில்வே தண்டவாளமும் அமைக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் கான்கிரீட் சுவர் அமைக்காமல், இரும்பு தகரத்தை கொண்டு சுற்றுச்சுவர் அமைத்து ெஷட் அமைக்கப்பட்டது.
ஆனால், பொள்ளாச்சியில், கான்கிரீட் சுவராககட்டப்பட்டு 'டவர் வேகன்ெஷட்' அமைக்கப்படுவதாகவும், இப்பணிகள் முழு வீச்சில் நடப்பதால், விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.