UPDATED : ஜூன் 29, 2026 09:02 PM
ADDED : ஜூன் 29, 2026 09:01 PM
1.ராமநாதபுரம், ஒலம்பஸ் கணேசபுரம், சுப்பையன் வீதியில் உள்ள தெருவிளக்கு இரு வாரங்களுக்கு மேல் எரியவில்லை.
- ராஜூ:
2. தரமற்ற ரோடால் அவதி வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் வீதியில் வார்டு எண் 42ல் தரமில்லாமல் போடப்பட்ட கான்கிரீட் சாலையால், மண் தூசு எழும்பி தினமும் அவஸ்தையாக உள்ளது.
- பிரசாத்:
3. குப்பையால் துர்நாற்றம் கணபதிபுதுார்- - செக்கான்தோட்டம் பகுதியை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதையில் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
- இனியன்:
4. ரோடு மோசம் என்.ஜி.ஜி.ஓ., காலனி தங்கவேல் வீதியில் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் அருகே ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளதால் பைக் ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
- மனோகரன்:
5. சேதமடைந்த கைப்பிடி வ.உ.சி., மைதானம் எல்.ஐ.சி., சிக்னல் அருகே நடைபாதையில் உடைந்த நிலையில் உள்ள கைப்பிடி கம்பி பாதசாரிகளை பதம் பார்க்க காத்திருக்கிறது.
- பரமசிவம்:
6. ரோட்டில் குழி சாய்பாபா காலனி ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் சர்வீஸ் ரோட்டில் உள்ள குழியில் சிக்கி வாகனங்கள் சேதமடைகின்றன.
- விநாயகம்:
7. சேதமடைந்துள்ள ரோடு செஞ்சிலுவை சங்கம் அருகே ரோட்டில் ஏற்பட்டுள்ள குழியால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
- சிக்கந்தர்:
