UPDATED : அக் 27, 2026 12:00 AM
ADDED : அக் 26, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், இன்று தங்கத் தேரோட்டம் நடக்கிறது.
அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், புதிதாக தங்கத்தேர் உருவாக்கப்பட்டு, பிப். 1ம் தேதி, முதல் முறை தேரோட்டம் நடந்தது. இதையடுத்து, ஒவ்வொரு மாதமும், கிருத்திகையன்று தேரோட்டம் நடக்கிறது. இந்த மாத தேரோட்டம், இன்று மாலை 6:30 மணிக்கு நடக்கிறது. முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதரராக சிறப்பு அலங்காரத்தில், உள்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார். அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
