UPDATED : நவ 11, 2026 07:05 PM
ADDED : நவ 11, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
நெகமம்: நெகமம், பழைய பெருமாள் கோவில் அருகே உள்ள மன வளக்கலை மன்றத்தில், நாளை (12ம் தேதி) சித்த மருத்துவ முகாம் நடக்கிறது.
நெகமம், பழைய பெருமாள் கோவில் பின்புறம், வேத சித்தா மருத்துவ கலிக்கம் அறக்கட்டளை சார்பில் சித்த மருத்துவ முகாம், நாளை (12ம் தேதி) காலை, 7:30 முதல், 9:00 மணி வரை, ஒரு மணி நேரம் நடக்கிறது.
இதில், கண் சார்ந்த பிரச்னைகள், தலை வலி, கல்லீரல் மற்றும் தோல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பெண்களுக்கான வயிற்று வலி, மருத்துவ ஆலோசனைகள் முகாமில் வழங்கப்படவுள்ளது.
