/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி நந்தவனத்தில் இன்று திதி கொடுக்கலாம்
/
நகராட்சி நந்தவனத்தில் இன்று திதி கொடுக்கலாம்
ADDED : ஜன 28, 2025 11:41 PM

மேட்டுப்பாளையம்; தை அமாவாசை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனத்தில், திதி கொடுக்க, 30 புரோகிதர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் நகராட்சிக்கு உட்பட்ட, அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனம் உள்ளது. இன்று தை அமாவாசை முன்னிட்டு, அதிகமான பொதுமக்கள் திதி கொடுக்க வர இருப்பதால், நந்தவன நிர்வாகத்தினர் கூடுதலாக, 18 புரோகிதர்களை ஏற்பாடு செய்து, மொத்தம், 30 புரோகிதர்கள் புரோகிதம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து நந்தவனத்தை நிர்வாகம் செய்யும் நிர்வாகிகள் ஆறுமுகம், சுகுமார், அருணாசல குமார் ஆகியோர் கூறுகையில், '' தை அமாவாசை முன்னிட்டு திதி கொடுக்க வரும் பொது மக்களுக்கு, போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீர், பிஸ்கட், டீ , அன்னதானம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
காலை, 4:00 முதல், மாலை,4:00 மணி வரை புரோகிதம் நடைபெற உள்ளது. ஆற்றில் பொது மக்கள் குளிக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன,'' என்றனர்.