UPDATED : செப் 29, 2026 08:38 PM
ADDED : செப் 29, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், 2.50 கோடி ரூபாயில் புதிதாக தங்கத்தேர் உருவாக்கப்பட்டது. முதல் தேரோட்டம் கடந்த பிப். 1ம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து, மாதம்தோறும் கிருத்திகையன்று தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த மாத தேரோட்டம் செப்., 30 மாலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் உள் பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார்.
