/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : நவ 17, 2024 05:16 AM

கும்பாபிஷேக விழா
வெள்ளானைப்பட்டி, மகா சக்தி நகரில் அமைந்துள்ள, மகாசக்தி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 6:30 மணி முதல் இரண்டாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. காலை, 9:00 முதல், 9:45 மணிக்குள் விமான கலசம், பாலகணபதி மற்றும் முருகனுக்கு, மகா சக்தி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழிப்புணர்வு மராத்தான்
சிறு வயது முதலே வரும், டைப் 1 சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் இன்று மராத்தான் நடக்கிறது. ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க்கில் காலை, 7:00 மணிக்கு துவங்கும் மராத்தானில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்கின்றனர்.
வாங்க சிரிக்கலாம்
கோவை நகைச்சுவை சங்கத்தின், 19வது 'வாங்க சிரிக்கலாம்' நிகழ்ச்சி, நவ இந்தியா இந்துஸ்தான் கல்லுாரியில், மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. 'மகிழ்ச்சி மந்திரம்' என்ற தலைப்பில் போராசிரியர் சிவகாசி ராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றுகிறார்.
யாதுமாகி நின்றாள்
சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது. சூலுார் முத்துக்கவுண்டன்புதுார் சுவாமி விவேகானந்தர் அரங்கில் மாலை, 6:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், 'யாதுமாகி நின்றாள்' என்ற தலைப்பில், பிரபல தொகுப்பாளர் மெய் ஸ்ரீ பேசுகிறார்.
போஸ்டல் பிரீமியர் லீக்
மேற்கு மண்டல அஞ்சல் துறை சார்பில், போஸ்டல் பிரீமியர் லீக் என்ற கிரிக்கெட் போட்டி நடக்கிறது. 14 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் போட்டி, தமிழ்நாடு வனக்கல்லுாரி மைதானத்தில் காலை முதல் நடக்கிறது.
புத்தகக் கண்காட்சி
நியுசெஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில், கோவை மாவட்ட நேரு ஸ்டேடியம் வளாகத்தில் அமைந்துள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுசில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, 38வது தேசிய புத்தகக் கண்காட்சி நடக்கிறது. காலை, 10:00 முதல் கண்காட்சியை பார்வையிடலாம்.
உயர்கல்வி மாநாடு
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவிலான எட்டாவது உயர்கல்வி மாநாடு மற்றும் கண்காட்சி நடக்கிறது. அவிநாசி ரோடு, கொடிசியா ஹாலில், ஹால் 'ஏ' அண்டு 'பி'-ல் நடக்கிறது. அடுத்த தலைமுறை கல்வித் தொழில்நுட்பங்கள் குறித்து கண்காட்சி, பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு நடக்கிறது.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'ஒழுக்கத்தின் மேன்மை' என்ற தலைப்பில் பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது. அனைவரும் பங்கேற்கலாம், அனுமதி இலவசம்.
அமைதியின் அனுபவம்
அண்ணாதுரை சிலை எதிரில், ஒசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
க.க.சாவடி, தானிஸ் அகமத் தொழில்நுட்பக் கல்லுாரியில் ஏழாவது பட்டமளிப்பு விழா நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு துவங்கும் இவ்விழாவில், வால்மார்ட் குளோபல் டெக் இந்தியா மேலாளர் விக்னேஷ் பரமசிவம் கலந்துகொண்டு, பட்டம் வழங்குகிறார்.
ரத்த தான முகாம்
ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்துார் வடவள்ளி மற்றும் பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ்., சார்பில் ரத்த தான முகாம் நடக்கிறது. வடவள்ளி, மவுத்தி மருத்துவமனையில், காலை, 10:00 மணி முதல் ரத்ததான முகாம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்., நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.
* குனியமுத்துார் டிவைன் மேரி சர்சில், மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை நடக்கிறது.