/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : நவ 23, 2024 11:32 PM

சத்ய சாய் அவதார தினம்
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின், 99வது அவதார தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மதியம், 12:00 முதல் 1:00 மணி வரை, நாராயண சேவா நடக்கிறது.
அபியாசா பரதநாட்டிய விழா
கலைமாமணி லாவண்யாவால் நிறுவப்பட்ட அபியாசா கிளாசிக்கல் டான்ஸ் அகாடமியின், 20வது ஆண்டு விழா நடக்கிறது. இன்று, ஆர்.எஸ்.புரம், கிக்கானி பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கில் மாலை, 6:00 மணிக்கு முதல் பரதநாட்டிய நிகழ்வுகள் நடக்கிறது.
இசை நிகழ்ச்சி
ஆர்.எஸ்.,புரம், ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 99வது பிறந்தநாள் விழா சிறப்பு இசை நிகழ்ச்சி, வடவள்ளி அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸ் பேஸ்-2வில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடக்கிறது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
புஜங்கனுார் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1973ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கின்றனர். முன்னாள் மாணவர்களின் 51ம் ஆண்டு சந்திப்பும், பரளிக்காடிற்கு குடும்பங்களுடன் சுற்றுலாவும் நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
திருமலையம்பாளையம், நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 14வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலை துணை வேந்தர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார்.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
விழா வீதி
கோவை விழாவின் ஒரு பகுதியாக, விழா வீதி நிகழ்ச்சி இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில், 30க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள், 20க்கும் மேற்பட்ட சமூகங்களின் சங்கமம் நடக்கிறது.
மராத்தான்
கோவை விழாவின் ஒரு பகுதியாக, 'வாங்க ஓடலாம்' என்ற தலைப்பில் மராத்தான் போட்டி நடக்கிறது. வ.உ.சி., மைதானத்தில் காலை, 5:00 மணிக்கு போட்டி துவங்குகிறது. இரண்டு, ஐந்து, 10 மற்றும் 15 கி.மீ., பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
இலவச மருத்துவ முகாம்
செயல் சமூக செயற்பாட்டுக்களம், யாதவ மாயம் பெருமாள் டிரஸ்ட் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்துகின்றன. கோவில்மேடு, வேலாண்டிபளையம், மாயம் பெருமாள் கோவில் திருமண மண்டபத்தில் காலை, 8:00 முதல் மதியம், 1:30 மணி வரை நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.
* குனியமுத்துார், டிவைன் மேரி சர்சில், மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை நடக்கிறது.