/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : டிச 01, 2024 01:13 AM

மஹா சம்ப்ரோஷன விழா
நீலம்பூர் அண்ணா நகரில் உள்ள, செல்வவிநாயகர் கோவிலில், மகா சம்ப்ரோஷன முதலாமாண்டு விழாவை முன்னிட்டு, காலை, 6:00 மணியளவில் வேள்வி வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளது.
பாட்மின்டன் போட்டி
லுானார் மன மகிழ் மன்றத்தாரின் கோவை மாவட்ட பாட்மின்டன் வீரர்கள் இடையிலான மாவட்ட அளவிலான ஐவர் பூப்பாந்தாட்டப் போட்டிகள் நடக்கிறது. நேரு விளையாட்டு அரங்கம் அருகில், காலை, 7:00 மணி முதல் போட்டிகள் நடக்கிறது.
உணவுத் திருவிழா
தமிழ்நாடு கேட்டர்ஸ் அசோசியேசன் சார்பில், கொங்கு உணவுத்திருவிழா மற்றும் திருமண கண்காட்சி கோவை கொடிசியா மைதானத்தில் இரண்டாம் நாளாக இன்றும் மாலை, 5:00 மணி முதல் நடக்கிறது. 400க்கும் மேற்பட்ட உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க உணவு பிரியர்களுக்கு இது சரியான நிகழ்வு.
தேர்வர்களுக்கு பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சோலை அமைப்பு சார்பில் அரசுப்பணிக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்கபவர்களுக்கு பயிலரங்கம் நடைபெறவுள்ளது. ஆர்.எஸ்.புரம்., மாவட்ட மைய நுாலகத்தில் காலை, 11:00 மணி முதல் 12:30 மணிவரை இந்நிகழ்வு நடைபெறும்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
இலவச யோகா பயிற்சி
அன்னுார் மனவளக்கலை மன்றத்தில், 'முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா' என்ற தலைப்பில், 12 நாள் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. அறிமுக வகுப்புகள் இன்று துவங்கவுள்ளன. பயிற்சிகள் மாலை, 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடைபெறவுள்ளது.
கண் பரிசோதனை
அன்னுார் டவுன் ரோட்டரி சங்கம், எஸ்.எம்.எப்., மருத்துவமனை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று, எஸ்.எம்.எப்., மருத்துவமனை வளாகத்தில் காலை, 8:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது.