/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : டிச 20, 2024 11:42 PM

அகண்ட நாம பஜனை
கோவை சித்தாபுதுார் ஐயப்ப சுவாமி கோவிலில், அகண்ட நாம பஜனை, மஹா அன்னதானம் ஆகியவை, காலை 5:00 மணிக்கு துவங்கி, நாளை காலை 5:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும். 22ம் தேதி காலை 10:30 மணி முதல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் மஹா அன்னதானம் நடக்கிறது.
மார்கழி விழாக்கோலம்
'தினமலர்' நாளிதழ் சார்பில், அபார்ட்மென்ட்களில் மார்கழி விழாக்கோலம்' என்ற கோலத்திருவிழா போட்டி நடத்தப்படுகிறது. பீளமேட்டில் உள்ள சன்னிசைடு அபார்ட்மென்டில் மதியம் 2:00 மணியில் இருந்து 4:00 மணி வரை நடக்கிறது. போட்டியாளர்களின் கோலத்துக்கு ஏற்ப பரிசுகள் காத்திருக்கின்றன.
நிலையும் நிலையற்றதும்
கோவை மலுமிச்சம்பட்டி, எப் 4, எப் 5 அம்பாள் நகர் 5வது வீதியில் உள்ள, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில், மாலை 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, நிலையும் நிலையற்றதும்' என்ற தலைப்பில், வாராந்திர சத்சங்கம் நடக்கிறது. சுவாமி சங்கரானந்தா அருளுரை வழங்குகிறார்.
நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,
'தினமலர்' நாளிதழ், வாஜிராம் அண்டு ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் வழங்கும், நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சி, கோவை நவ இந்தியா ரோடு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியில், காலை 10:00 முதல் மதியம்1:00 மணி வரை நடக்கிறது. சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும், வழிமுறை குறித்து விளக்கப்படுகிறது.
முதல் பட்டமளிப்பு விழா
கோவை பெரியநாயக்கன்பாளையம், யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல் பட்டமளிப்பு விழா, காலை 10:30 மணியளவில், கல்லுாரி கருத்தரங்கு கூடத்தில் நடக்கிறது. இதே போல், கல்லுாரியின் முன்னாள் மாணவர் சங்க கூட்டம், மாலை 3:00 மணியளவில், கல்லுாரி கருத்தரங்க கூடத்தில் நடக்கிறது.
ஆதார் சிறப்பு முகாம்
ஐங்கரன் கல்வி அறக்கட்டளை மற்றும் போத்தனுார் தபால் நிலையம் சார்பில், ஆதார் மேம்படுத்துதல் சிறப்பு முகாம், செட்டிபாளையம், கால்ப் கிளப் சாலையில் உள்ள, அவதார் பப்ளிக் பள்ளியில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. வாய்ப்பை பயன்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத உபன்யாசம்
கோவை திருப்பாவை சங்கம் மற்றும் ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம் இணைந்து, மார்கழி மாத உபன்யாசம், தேவஸ்தானத்தில் மாலை 6:30 மணி முதல் இரவு 8:15 வரை மார்கழி மாத உபன்யாசம் நடக்கிறது. கலைமாமணி கல்யாணபுரம் ஸ்ரீ உ.வே.ஆராவமுதாச்சாரியார் நடத்துகிறார்.
ஆண்டாள் எனும் அருமருந்து
மார்கழி மாதத்தில், பல இடங்களில் சொற்பொழிவுகள் நடக்கின்றன. இதன் ஒரு கட்டமாக, கோவை சுந்தராபுரம் செங்கப்பக்கோனார் திருமண மண்டபத்தில், ஆண்டாள் எனும் அருமருந்து எனும் தலைப்பில் முனைவர் சியாமயா, மாலை 5:30 மணியளவில் பேச உள்ளார்.
மார்கழி மஹா உத்சவம்
கோவை ஸ்ரீ மாருதி கான சபா சார்பில், மார்கழி மஹா உத்சவம் நடந்து வருகிறது. நாம சங்கீர்த்தன மேளா என்ற பெயரில் மாலை 5:30 மணிக்கு நாம பஜன் மண்டலி, இரவு 7:00 மணிக்கு, ராஜ கணபதி பஜன் சபா ஆகிய நிகழ்ச்சிகள், ஆர்.எஸ்.புரம், பாஷ்யகாரலு சாலையில் உள்ள ஸ்ரீ மாருதி கான சபாவில் நடக்கிறது.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
முதல்வரின் கவனம் ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் சார்பில், கோவை மண்டல அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், டாடா பாத், பவர் ஹவுஸ் முன், காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார் புனித ஜோசப் சர்ச்சிலும், கோவைப்புதுார், பாரத் பெட்ரோல் பங்க் அருகில், பேரூர் பிரதான சாலை ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியிலும், இரவு 7:00 மணி முதல் 8:30 வரை நடக்கிறது.
ஜெமினி கிராண்ட் சர்க்கஸ்
குழந்தைகள் உற்சாகமாக இருப்பதை பார்ப்பது தான், பெற்றோருக்கு மிகப்பெரிய குஷி. அதை சிறப்பாக நிறைவேற்ற, சிங்காநல்லுாரில், திருச்சி சாலை மீன் மார்க்கெட் எதிரில், ஜெமினி கிராண்ட் சர்க்கஸ் நிகழ்ச்சி, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணிக்கு நடக்கிறது.