/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : பிப் 01, 2025 02:00 AM

தியாகப் பிரம்ம கானாஞ்சலி
ராம்நகர், கோதண்டராமர் கோவிலில், ஸ்ரீ தியாகப் பிரம்ம கானாஞ்சலி, 71ம் ஆண்டு உற்சவம் நடக்கிறது. மாலை, 4:45 மணி முதல் பஞ்சரத்னம் - கோஷ்டி கானம் நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 6:15 மணி முதல், ஸ்ரீ அஸ்வத் நாராயணன் பாட்டு நடக்கிறது.
மகா சுதர்ஷன ஹோமம்
நாயக்கன்பாளையம், பாலமலை அரங்கநாதர் கோவிலில், மகா சுதர்ஷன ஹோமம் நடக்கிறது. காலை, 7:00 முதல் 11:00 மணி வரை, விஷ்ணு சகஸ்ரநாமம், கோமாதா பூஜை, சங்கல்பம், சுதர்ஷன ஹோமம் நடக்கிறது. காலை, 11:00 மணி முதல், அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.
மண்டல பூஜை நிறைவு விழா
ஈச்சனாரி, குழந்தை வேலப்பர் கோவிலில், 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது. காலை, 8:30 மணி முதல் கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் நடக்கிறது. இரவு, 7:00 மணி முதல், சுப்பிரமணிய சுவாமதி திருவீதி உலா, பள்ளியறை பூஜை நடக்கிறது.
அடுத்த தலைமுறை தலைவர்கள்
கருமத்தம்பட்டி, ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ் சார்பில், கார்ப்பரேட் தலைவர்கள் மற்றும் மாணவர்களிடையே கருத்தரங்கு நடக்கிறது. 'அடுத்த தலைமுறை தலைவர்களுக்கான திறன்கள்' என்ற தலைப்பில், கல்லுாரி வளாகத்தில் காலை, 10:30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது.
விருதுகள் வழங்கும் விழா
பாரதீய வித்யா பவன் சார்பில், தமிழ் மாமணி மற்றும் தமிழ்ப்பணிச் செம்மல் விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், பாரதீய வித்யா பவன் வளாகத்தில், காலை, 10:30 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
சதுப்பு நில தினம்
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், சதுப்பு நில தினத்தை முன்னிட்டு பறவைகள், பட்டாம்பூச்சிகள், நீர்வாழ் உயிரினங்கள் குறித்து இயற்கை நடை, குறிப்பெடுத்தல் மற்றும் போட்டி நடக்கிறது. வெள்ளலுார் குளத்தில், காலை, 8:00 மணி முதல், 'நம் எதிர்காலத்திற்காக சதுப்புநிலங்களை பாதுகாக்க வேண்டும்' என்ற தலைப்பில், நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஆசிரியர்களுக்கு கவுரவம்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி விழுக்காடு வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு, விருது வழங்கும் விழா நடக்கிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈச்சனாரி, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில், காலை, 10:00 மணி முதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்
தினமலர், இந்தியன் நீர்ப்பணிகள் சங்கம், 'எய்ம்' தன்னார்வத் தொண்டு நிறுவனம், திருக்குறள் ஆய்வுக் கழகம் சார்பில், முப்பெரும் விழா நடக்கிறது. இதில், நீர் வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடக்கிறது. குனியமுத்துார், கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், காலை, 9:00 மணிக்கு நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
அரசூர், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 12வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. தாட்வொர்க்ஸ், டேலண்ட் பிசினஸ் பார்ட்னர் லீட் நிகிதா ஜெயின், விருந்தினராக கலந்து கொள்கிறார். கல்லுாரி வளாகத்தில் நடக்கும் விழாவில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
அறிவியல் கண்காட்சி
செயல்முறையுடன் அறிவியலை கற்றுக்கொள்ள இதோ ஒரு வாய்ப்பு. அவிநாசி ரோடு, கொடிசியா வளாகம் ஹால் 'ஏ' வில், அறிவியல் கண்காட்சி காலை, 10:00 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கிறது. வினாடி - வினா, விவாதம் மற்றும் விளையாட்டுகள், நடனம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளும் உள்ளன.அனுமதி இலவசம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை வாயிலாக, குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.

