/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மார் 16, 2025 12:15 AM
கும்பாபிஷேக விழா
இடையர்பாளையம், குனியமுத்துார், யோக விநாயகர் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 5:30 மணி முதல், மூன்றாம் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள் விமான கோபுர கலசங்கள் மற்றும் சுவாமிகளுக்கு, கும்பாபிஷேக விழா நடக்கிறது.
வசந்த உற்சவம்
மேட்டுப்பாளையம், காரமடை, அரங்கநாதசுவாமி கோவிலில், மாசிமகத் தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதி நிகழ்வான இன்று, வசந்த உற்சவம் காலை, 9:00 மணிக்கு நடக்கிறது.
மகளிர் தின விழா
அகில பாரத பிராமணர் சங்கம் சார்பில், மகளிர் தினம் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. வடவள்ளி பேருந்து நிலையம் எதிரில் உள்ள, சக்தி காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில், காலை, 10:00 மணி முதல் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் விழா நடக்கிறது. இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமும் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி ரை நடக்கிறது.
* குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
பகவத்கீதை சொற்பொழிவு
உங்கள் எண்ணங்களால் ஒன்றை உருவாக்கவும், அழிக்கவும் முடியும் என போதிக்கும் பகவத்கீதை, மனமே வலிமையானது என்கிறது. டாடாபத், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷனில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.
கண் பரிசோதனை முகாம்
கோவை மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படும் முகாம், கே.என்.ஜி.புதுார் பிரிவு - கவுண்டர்மில்ஸ் ரோடு, எம்.ஜி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், காலை, 8:30 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கிறது.
சமஸ்கிருத வகுப்புகள்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.
பயிற்சி முகாம்
அல்விதா இன்டர்நேஷனல் சார்பில், விமானத்துறையில் உத்திரவாதமான வேலைவாய்ப்பு குறித்த இலவச விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடக்கிறது. சாய்பாபாகாலனி, ஏ.ஐ.ஐ.சி., வளாகத்தில், காலை, 10:30 மணி முதல் நடக்கும் முகாமில், விமானத்துறை அதிகாரிகள், விமானவியல் பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.