sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 24, 2025 06:27 AM

Google News

ADDED : ஆக 24, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

108 சங்காபிஷேக விழா விளாங்குறிச்சி, ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின்நான்காம் ஆண்டை முன்னிட்டு108 சங்காபிஷேக விழா நடக்கிறது. காலை 9 முதல் மதியம் 1 மணி வரை, விநாயகர் வழிபாடு, வேள்வி வழிபாடு, 108 சங்காபிஷேகம், திருக்குட நீராட்டு, பேரொளி வழிபாடு, அன்னதானம் நடக்கிறது. மாலை6 மணிக்கு ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது.

சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், வேத வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் காலை 9.30 மணி முதல் நடக்கிறது.பிரம்மஸ்ரீ திருவிசைநல்லுார் ராமகிருஷ்ண பாகவதர் மற்றும் சமஸ்த பாகவதாள் பஜனை உற்சவம் நடக்கிறது.

மண்டல பூஜை விழா பெரியநாயக்கன்பாளையம், காமராஜ் நகர், பால விநாயகர், ராஜ ராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் மண்டல பூஜை நடக்கிறது. காலை8மணிக்கு ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. மாலை5மணிக்கு வீதி உலா நடக்கிறது.

யோக சூத்திர சொற்பொழிவு ஆர்.எஸ்.புரம், மேற்கு சம்பந்தம் ரோடு, இன்டக்ரல் யோகா இன்ஸ்டிட்யூட் சார்பில், பதஞ்சலி யோக சூத்திர சொற்பொழிவு மாலை 6.30 மணி முதல் நடக்கிறது. திருவண்ணாமலை, ஸ்ரீ அருணாச்சல ரமண ஆத்ம வித்யா மந்திர் சுவாமி ரமண ஸ்வருபானந்தா பங்கேற்கிறார்.

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பெருமிழலை ஸ்ரீ குரும்ப நாயனார் ஆன்மிக மற்றும் சமுதாய அறக்கட்டளை சார்பில், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. மதுக்கரை, குரும்பபாளையம், பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர்கோவில் வளாகத்தில், காலை 10மணிக்கு நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார் புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார் ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு7 முதல் 8.30 மணி வரை முகாம் நடக்கிறது.

கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன் சார்பில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதா உபதேசம் நிகழ்ச்சி நடக்கிறது. டாடாபாத், மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசனில் மாலை 5மணிக்கு நடக்கிறது.

நாஞ்சில் நாடன் விருது விழா சிறுவாணி வாசகர் மையம் சார்பில், நாஞ்சில் நாடன் விருது வழங்கும் விழா, அவிநாசி ரோடு, ஆருத்ரா ஹாலில், மாலை5மணிக்கு நடக்கிறது. எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சிறப்புரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து, பிரவீன் விப்ரநாராயணனின்இசை நிகழ்ச்சி நடக்கிறது.

அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாதுரை சிலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை 11மணிக்கு, சத்சங் நடக்கிறது.

ஓவியக் கண்காட்சி கோடு ஆர்ட் கேலரி சார்பில், 'அம்பாரத் துாரிகை' என்ற ஓவியக் கண்காட்சி நடக்கிறது. அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலை மையத்தில், காலை, 10 முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.

மருத்துவ முகாம் லயன்ஸ் கிளப்ஸ் ஆப் கோயமுத்துார் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரி சங்கம் சார்பில், சிட்டி போலீஸ் மற்றும் குடும்பத்தினருக்கு, மெகா மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது. பி.ஆர்.எஸ்., வளாகத்தில், காலை9.15 முதல் மதியம்2.15 மணி வரை நடக்கிறது.

சிறப்புப் பெற்றோர்களுக்காக

சாரதி பேமேக் சார்பில், சிறப்புப் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வடகோவை, குஜராத்தி சமாஜத்தில், காலை10மணிக்கு நடக்கிறது. தன் சிறப்புக் குழந்தை பிரேமை, பாடகர் மற்றும் இசை ஆசிரியராக மாற்றி,தமிழக கவர்னர் ரவியிடம், 'பிரஸ்டீஜியஸ்மதர்' என்ற விருதை வென்ற நிர்மலா பேசுகிறார்.








      Dinamalar
      Follow us