/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : செப் 12, 2025 10:34 PM
சத்ய சாயி கோடி அர்ச்சனை சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், வெஸ்ட் கிளப் ரோட்டில் நடக்கிறது. காலை 7, 9:30 மற்றும் மாலை 4:30 மணிக்கு பாராயணமும், மாலை 5:30க்கு சாய்பஜன் சத்சங்கமும் நடக்கிறது.
கிருஷ்ணர் ஜெயந்தி விழா யாதவ இளைஞர் அணியின் சார்பில் மாச்சம்பாளையம், கோபாலகிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. காலை 10 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது.
கிருத்திகை விழா சி றுமுகை, பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் கோவிலில், ஆவணி மாத கிருத்திகை விழா நடக்கிறது. காலை 6.00 முதல் மதியம் 1 மணி வரை, திருப்பள்ளி எழுச்சி, பால் அபிஷேகம், கால சந்தி, கிராமிய கலை நிகழ்ச்சி, மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.
கற்றல் பயணம் கவுண்டம்பாளையம், எம்.கே.பி. கார்டன், செட்டிநாடு ஹரி ஸ்ரீ வித்யாலயம் பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறமையை வெளிப்படுத்தும் வகையில், 'கற்றல் பயணம்' நிகழ்ச்சி நடக்கிறது.
காலை 9 முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கும் இந்நிகழ்வில், குழந்தைகள் தங்கள் கற்ற அனுபவங்களை விளக்கு கின்றனர்.
தாய் நாட்டைக் காப்போம் ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோவை மாவட்டப்பிரிவு சார்பில், தாய் 'நாட்டைக் காபம்போம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காலை 9 மணிக்கு நடக்கிறது.
'ரா மேட்' இந்தியா கண்காட்சி கொடிசியா' சார்பில், அவிநாசி ரோட்டில் உள்ள, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், சர்வதேச மூலப் பொருட்கள் கண்காட்சி, 'ரா மேட் இண்டியா 2025' நடக்கிறது.
காலை 10.30 முதல் மாலை 5.30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.