/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்(கோவை)
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்(கோவை)
ADDED : செப் 13, 2025 11:12 PM
கிருஷ்ணர் ஜெயந்தி விழா குனியமுத்துார், இடையர்பாளையம் கிருஷ்ணர் கோயிலில், கிருஷ்ணர் ஜெயந்தி விழா நடக்கிறது. காலை 8.30 முதல் குழந்தை ஸ்ரீ கிருஷ்ண பகவான் தொட்டிலில் இடும் நிகழ்ச்சி, அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கிருஷ்ண பகவான் வீதி உலாவுடன் பஜனை நடக்கிறது.
* யாதவ இளைஞரணி சார்பில் மாச்சம்பாளையம், கோபாலகிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. காலை 7 முதல் சுக்கு பொடி மாற்றுதல், குழந்தை கிருஷ்ணரை தொட்டிலில் இடுதல், 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு வழுக்குமரம் நடுதல், மாலை 3 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு வழுக்குமரம் ஏறுதல், கிருஷ்ணர் ரதம் வீதி உலா நடக்கிறது.
ஆன்மிக சொற்பொழிவு சுவாமி அனுபவானந்தா சரஸ்வதிஜியின் ஆன்மிக சொற்பொழிவு, ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் ரோடு, இன்டக்ரல் யோகா நிறுவனத்தில் நடக்கிறது. 'சனத்சுஜாதீயம்' என்ற தலைப்பில் காலை 7 முதல் 8 மணி வரை மற்றும் 'பஞ்சதசி' என்ற தலைப்பில் இரவு 7 முதல் 8 மணி வரை நடக்கிறது.
முப்பெரும் விழா அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கோவை சார்பில், நல்லாசிரியர்கள், சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, சுங்கம் முதல் உக்கடம் பைபாஸ் சாலையில் ஆர்.ஜே., பங்ஷன் ஹாலில் நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கல், மேற்கு மண்டல அமைப்பு துவக்கம் போன்ற நிகழ்வுகளும் நடக்கின்றன.
சத்ய சாயி கோடி அர்ச்சனை சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை நடக்கிறது. ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் ரோட்டில் நடக்கிறது. காலை 7, 9.30 மற்றும் மாலை 4.30 மணிக்கு பாராயணம், மாலை 5:30க்கு சாய்பஜன் சத்சங்கம் நடக்கிறது.
பாங்கறி பட்டிமன்றம் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'செஞ்சொற்களின் இனிமை, கவியின்பத்தின் அழகை பெரிதும் வெளிப்படுத்துவது சிலப்பதிகாரத்திலே, கம்பராமாயணத்திலே மற்றும் பெரிய புராணத்திலே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், கிக்கானி பள்ளியில், மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
ஓணம் விழா கோவை மலையாளி சங்கங்கள் சார்பில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. டாடாபாத், கோவை மலையாளி சமாஜம் கலையரங்கத்தில் காலை 10 மணி முதல் கேரள பாரம்பரியத்தை போற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன.
விழிப்புணர்வு மராத்தான் நேரு கல்வி குழுமங்கள் சார்பில், 'போதையில்லா கோவை' கருத்தை வலியுறுத்தி, மராத்தான் போட்டி நடக்கிறது. என்.ஜி.ஐ., மராத்தான் நேரு ஸ்டேடியம் அருகே, காலை 6 மணிக்கு துவங்குகிறது.
குழந்தைகளின் திறமைகள் குழந்தைகள் மற்றும் மாற்றத்திறனாளிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், 'ஏபிளிட்டி' எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடக்கிறது. நவஇந்தியா, எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில், காலை 8.30 மணி முதல் நடக்கிறது.