/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : அக் 11, 2025 10:26 PM
கோடி விஷ்ணு நாம பாராயணம் இடையர்பாளையம், தடாகம் ரோடு, வி.ஆர்.ஜி., திருமண மஹாலில், கோடி விஷ்ணு நாம பாராயணம் நடக்கிறது. காலை 5.30 மணி முதல் கணபதி ஹோமம், கோ பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், மகா தீபாராதனை, சுவாமி ஊர்வலம் நடக்கிறது.
திருக்கல்யாணம் கோவை கருடபார்வை அறக்கட்டளை சார்பில், ஸ்ரீதேவி பூதேவி வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் மற்றும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. சுந்தராபுரம் செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் காலை 8 முதல் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், திருவிளக்கு பூஜை, திருக்கல்யாண வைபம் நடக்கிறது.
பகவத்கீதை சத்சங்கம் மலுமிச்சம்பட்டி ஆத்ம வித்யாலயம், அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில் பகவத்கீதை சத்சங்கம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இரண்டு நாள் நிகழ்வில், ஆத்ம வித்யாலயம் ஆச்சாரியார்கள் சத்சங்கம் வழங்குகின்றனர்.
யோக சூத்திர சொற்பொழிவு ஆர்.எஸ்.புரம், மேற்கு சம்பந்தம் ரோடு, இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட் சார்பில், பதஞ்சலி யோக சூத்திர சொற்பொழிவு மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. திருவண்ணாமலை அருணாச்சல ரமண ஆத்ம வித்யா மந்திர் சுவாமி ரமண ஸ்வருபானந்தா பங்கேற்கிறார்.
வள்ளலார் விழா உலகத் தமிழ் நெறிக்கழகம் சார்பில் வள்ளலார் விழா நடக்கிறது. பூமார்க்கெட், தேவாங்க மேல்நிலைப்பள்ளி அருகில் சன்மார்க்க சங்க விழா, காலை 9.30 மணிக்கு நடக்கிறது.
ஓவியக் கண்காட்சி கஸ்துாரி ஸ்ரீனிவாசன் கலை மையம் சார்பில், கும்பகோணம் அரசு நுண்கலை கல்லுாரி மாணவர்களின் ஓவியக்கண்காட்சி நடக்கிறது. அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலைமையத்தில் காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சி நடக்கிறது.
விருதுகள் வழங்கும் விழா செயல் சமூக செயற்பாட்டுக்களம் சார்பில், சிறந்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடக்கிறது. கோவில்மேடு, வேலாண்டிபாளையம், மாயம்பெருமாள் கோவில் சமுதாயக்கூடத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது.
தீபாவளி கொண்டாட்டம் லயன்ஸ் கிளப் ஆப் சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் மற்றும் ஸ்வதர்மம் பவுண்டேசன் சார்பில், சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. உக்கடம் பெரிய குளத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது.
அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாதுரை சிலை எதிரில் ஒசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை 11 மணிக்கு சத்சங்கம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். ஆல் கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார் புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார் ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8.30 மணி வரை இம்முகாம் நடக்கிறது.