/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : அக் 17, 2025 11:30 PM
கருட சேவை காந்திபார்க், சுந்தரம் வீதி, ஸ்ரீ தேவி, பூ தேவி கல்யாண வெங்கட்ரமணசாமி கோவிலில் கருட சேவை மற்றும் திருவீதி உலா நடக்கிறது. காலை 8.35 மணிக்கு நித்யபடி பூஜையும், மாலை 6.35 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா புறப்பாடும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
சண்டி ஹோமம் தடாகம்ரோடு, கே.என்.ஜி., புதுார், சிருங்கேரி சிவகுரு மகாவிஷ்ணு சேசத்ரத்தில், சண்டி மஹா ஹோமம் நடக்கிறது. காலை 9 முதல் 11 மணி வரை சக்கர நவாவரண பூஜையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை சண்டி ஹோமமும் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8:30 மணி வரை முகாம் நடக்கிறது.