/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : நவ 08, 2025 01:02 AM
கந்தர் அனுபூதி மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில் வாராந்திர சத்சங்கம் நடக்கிறது. 'கந்தர் அனுபூதி' என்ற தலைப்பில், மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை, சுவாமி சங்கரானந்தா சத்சங்கத்தை வழங்குகிறார்.
மருத்துவமனைகளை மேம்படுத்துதல் இந்திய மருத்துவ சேவையாளர்கள் சங்கம் சார்பில், வருடாந்திர மாநாட்டின் இரண்டாவது பதிப்பு, அவிநாசி ரோடு, மெர்லிஸ் ஹோட்டலில், காலை 11 மணிக்கு நடக்கிறது. ' ஒவ்வொரு மருத்துவமனையையும் மேம்படுத்தல்' என்ற தலைப்பில், மாநாட்டில் பல்வேறு மருத்துவமனைகளின் நிர்வாகத்தினர் உரையாற்றுகின்றனர்.
அத்லெடிக் சாம்பியன்ஷிப் ஸ்போர்ட்ஸ் லேண்ட் சார்பில், 'அத்லெடிக் ஹன்ட்' என்ற பெயரில், பள்ளிகளுக்கிடையேயான மூன்றாவது அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. நேரு மைதானத்தில், காலை 8 மணி முதல் போட்டி நடக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்.
திறன் போட்டிகள் பச்சாபாளையம், ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், பள்ளி மாணவர்களுக்கான திறன் போட்டிகள் நடக்கிறது. ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில், காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
புதிய கலெக்சன் அறிமுகம் ஜூவல் ஒன் சார்பில், நாளை புளோரன்சியா மற்றும் ஜிலாரா ஆகிய நகை கலெக்சன் அறிமுக நிகழ்ச்சி நடக்கிறது. டி.வி. சாமி ரோடு, ஆர்.எஸ்.புரம் ஷோரூமில் மாலை 4.40 மணிக்கு நடக்கிறது. அறிமுக சலுகைகளும் வழங்கப்படுகிறது.
விளையாட்டு விழா சுகுணா சர்வதேசப் பள்ளியில், விளையாட்டு விழா, நேரு நகர், காளப்பட்டி ரோடு, சுகுணா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் காலை 8.30 மணிக்கு நடக்கிறது. தமிழ்நாடு மற்றும் கேரளா விளையாட்டு கிராம பள்ளிகளின் மண்டல தலைவர் அசோக் குமார் பங்கேற்கிறார்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8:30 மணி வரை முகாம் நடக்கிறது.

