/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜன 03, 2026 05:23 AM
பள்ளி வழிகாட்டி தினமலர்' நாளிதழின் 'பள்ளி வழிகாட்டி 2026' நிகழ்ச்சி, இன்றும், நாளையும் நடக்கிறது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வழிகாட்டி இந்த நிகழ்ச்சி, அவிநாசி ரோடு சுகுணா திருமண மண்டபத்தில் காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை நடக்கிறது.
கொங்கு மண்டலத்தின் மிகச்சிறந்த 25க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே கூரையின் கீழ் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.
பி.எஸ்.ஜி., காதம்பரி பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில், காதம்பரி இசை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு பி.எஸ்.ஜி., மாணவர்களின் 'தசாவதார தர்மம்' என்ற தலைப்பில் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும், 'மதுர சங்கீதம்' கர்நாடக இசைக் கச்சேரியும் நடக்கிறது.
தர்மசாஸ்தா மகோற்சவம் ஸ்ரீ சபரீச சேவா சங்கம் சார்பில் 13ம் ஆண்டு தர்மசாஸ்தா மஹோற்சவம் நடக்கிறது. காலை 6 முதல் மதியம் 12.30 மணி வரை, ஹோமங்கள், அபிஷேகம், அலங்காரம், நாமசங்கீர்த்தனம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரை பஞ்சவாத்தியத்துடன் சுவாமி ஊர்வலம், நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.
'எப்போ வருவாரோ!' ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'எப்போ வருவாரோ 2026' ஆன்மிக தொடர் சொற்பொழிவு, ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் மாலை 6 மணிக்கு நடக்கிறது. இன்று, ஜெயந்த ஸ்ரீ, 'ராமகிருஷ்ணா பரமஹம்சர் குறித்து உரையாற்றுகிறார்.
நுால் வெளியீட்டு விழா சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பையின் நுால் வெளியீட்டு விழா, பாரதியார் பல்கலையின், மகாகவி பாரதியார்உயராய்வு மையத்தில் காலை 9 மணிக்கு நடக்கிறது.
'என் சுயசரிதை - சகோதரி ஆர்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாள்' என்ற நுால் வெளியிடப்படுகிறது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு காளப்பட்டி ரோடு, நேரு நகர், சுகுணா பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடக்கிறது. காலை 10 மணிக்கு கல்லுாரி வளாகத்தில் நடக்கும் நிகழ்வில், 2012-25 ம் ஆண்டு வரை படித்த, மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8:30 மணி வரை முகாம் நடக் கிறது.

