/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : அக் 04, 2024 11:40 PM

நவராத்திரி திருவிழா
சிட்கோ, குறிச்சி பேஸ் 2, ஒம்சக்தி ராஜேராஜேசுவரி அம்மன் கோவிலில், நவராத்திரி பெருந்திருவிழா நடக்கிறது. மாலை, 6:30 மணி முதல், மகா பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்குதல் மற்றும் கலாலயம் நாட்டிய பள்ளி குழந்தைகளின்நடன நிகழ்ச்சி நடக்கிறது.
மகோற்சவ விழா
ரேஸ்கோர்ஸ், ஸ்ரீ சாரதாலயம் கோவிலில் மகோற்சவ விழா நடக்கிறது. காலை, 6:30 முதல் 11:30 மணி வரை, கட்டளை சங்கல்பம், சக்ர அபிஷேகம், தேவி பாராயணம், சுவாசினி, கன்னிகா பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. இரவு, 8:00 மணி முதல், திண்டி உற்சவம், மகா தீபாரதனை, அஸ்டாவாதன சேவை நடக்கிறது.
கொலு பொம்மை
சிட்டுக்குருவி அறக்கட்டளை சார்பில், நவராத்திரி விழா பூஜா நடக்கிறது. ராமகிருஷ்ணாபுரம், சாரதா தேவி வீதியில், சிட்டுக்குருவி அறக்கட்டளையில், கொலு கண்காட்சி இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை நடக்கிறது. குடும்பத்தினருடன் கொலு தரிசனம் செய்து மகிழலாம்.
சங்கீத மகோற்சவம்
அஜ்ஜனுார் ரோடு, வேடப்பட்டிவேதமாதா காயத்ரிதேவி கோவில் நவராத்திரி சங்கீத மகோற்சவம் நடக்கிறது. இன்று, மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை,கோவை குமாரி பாலா குழுவினரின் வாய்ப்பாட்டு மிருதங்கம் நடக்கிறது.
ஊழலில் இருந்து நாட்டைக் காப்போம்
ஊழலில் இருந்து, 'தாய் நாட்டைக் காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது. வேளாண் பல்கலை, பட்டமளிப்பு விழா அரங்கத்தில், காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. அறப்போர் இயக்கம் ராதாகிருஷ்ணன், வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்துகொள்கின்றனர்.
பட்டமளிப்பு விழா
அரசூர், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், 11வது பட்டளிப்பு விழா நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு விழா துவங்குகிறது. சிங்கப்பூர் டெவலப்மென்ட் வங்கி துணைத் தலைவர் லிஜேஷ் குமார், இந்தியாவுக்கான ஜிம்பாவே குடியரசின் துாதர் ஸ்டெல்லா நிகோமோ பங்கேற்கின்றனர்.
திருக்குறள் பார்வையில்
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில் தொடர்பு கொள்ளும் திறன்கள் குறித்த பயிலரங்கு நடக்கிறது. மலர் அங்காடி, தேவாங்க பேட்டைத் தெருவில், சுவாமி விவேகானந்தர் இல்ல பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.
அறிமுக விழா
வரும் 2025ம் ஆண்டு ஜன., மாதம் 'பில்ட்மேட் ' ஆண்டு சர்வதேச கட்டுமானம் மற்றும் உள்அலங்கார கண்காட்சி நடக்கிறது. இதன் அறிமுக விழா, அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி., கன்வென்சன் சென்டரில், மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.
71வது ஆண்டு விழா
அவிநாசி ரோடு, ஜென்னிஸ் ரெசிடன்சி ஓட்டலில், காலை, 11:00 மணிக்கு, தமிழ்நாடு தோட்டத்தொழிலதிபர் சங்கத்தின், 71வது ஆண்டு விழா நடக்கிறது. தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் வீரராகவ ராவ் கலந்துகொள்கிறார்.
கீரை கண்காட்சி
கீரை கடை.காம் நிறுவனம் சார்பில், கீரை மற்றும் உணவு கண்காட்சி, என்.ஜி.ஜி.ஒ., காலனி, கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடக்கிறது. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், 200க்கும் மேற்பட்ட வகைகளில் கீரை காட்சிப்படுத்தப்படுகிறது.