sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : அக் 19, 2024 11:32 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்டிய விழா


பாரதிய வித்யா பவன் கோவை கேந்திராவில், 23வது பவன்ஸ் நாட்டிய விழா நிறைவு நாள் நிகழ்வு, இன்று மாலை, 6:00 மணி முதல் நடக்கிறது.

தொழிற்சங்க பயிலரங்கு


கோவை வங்கி ஊழியர் சங்கம் சார்பில், தொழிற்சங்க பயிலரங்கு வடகோவை சிந்தாமணி கூட்டுறவு வளாகத்தில் நடக்கவுள்ளது. காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை இந்நிகழ்வுகள் நடைபெறும்.

இலவச மருத்துவ முகாம்


கோவை மாநகர போலீஸ் மற்றும் பன்னாட்டு அரிமா சங்கங்கள், ராயல் கேர் மருத்துவமனை சார்பில் இலவச கல்லீரல் பரிசோதனை மருத்துவ முகாம், பி.ஆர்.எஸ்., வளாகம் காவலர் மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. காலை, 9:00 முதல் 1:00 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.

புண்ணிய தேசம்


விவேகானந்தர் இளைஞர்சக்தி இயக்கம் சார்பில், 'நமது தேசம் புண்ணிய தேசம்' என்ற விழிப்புணர்வு சிறப்புரை, சூலுார் முத்துக்கவுண்டன்புதுார் சுவாமி விவேகானந்தர் அரங்கில் நடைபெறவுள்ளது. நிகழ்வு, மாலை, 6:00 முதல் 8:00 மணி வரை நடைபெறும்.

நிறுவனர் நாள் விழா


நுாற்றாண்டு பழமையான, கோவை சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர் நாள் விழா இன்று நடக்கிறது. பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி அரங்கு. காலை, 10:00 மணி.

நுால் அறிமுக விழா


விஜயா பதிப்பகம் சார்பில், மாக்கியவெல்லி காப்பியம் என்ற நுால் அறிமுக விழா இன்று காலை, 11:00 மணிக்கு ராஜவீதி விஜயா பதிப்பகத்தில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் மற்றும் இந்நுால் ஆசிரியர் கபிலன் வைரமுத்து பங்கேற்கவுள்ளார்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சார்பில், குடிநோய் விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார் டி.எஸ். நர்சரி பள்ளியில் இன்று காலை, 10:30 முதல் 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார் டிவைன் மேரி சர்ச்சில் மாலை, 6:30 முதல் 8:30 மணி வரை நடைபெறுகிறது.

நுாற்றாண்டு விழா


இந்திய மருத்துவ சங்க கோவை கிளையின், நுாற்றாண்டு விழா ஐ.எம்.ஏ., அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்வு, காலை, 4:30 மணி முதல் 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us