/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் வினியோகம் துவக்கம்
/
பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் வினியோகம் துவக்கம்
பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் வினியோகம் துவக்கம்
பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் வினியோகம் துவக்கம்
ADDED : ஜன 08, 2024 01:47 AM

கோவை:பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் கோவை மாவட்டத்தில் நேற்று துவங்கியது.
பொங்கலை முன்னிட்டு அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, ரூ.1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை, தமிழக அரசு வழங்குகிறது.
வரும், 10 முதல், 14ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு, ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட உள்ளது. பொதுமக்களிடையே குழப்பத்தை தவிர்க்க, டோக்கன் வழங்கப்படுகிறது.
ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்தனர். மாவட்டத்தில் மொத்தம், 8.56 லட்சம் டோக்கன்கள், 1,140 ரேஷன் கடைகள் வாயிலாக வினியோகிக்கப்பட உள்ளன.
ரேஷன் கடை விற்பனை முனைய எந்திரத்தில், பயோமெட்ரிக் முறையில், டோக்கன் வழங்கப்படும். பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட விபரம், குடும்ப அட்டைதாரரின் மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர், பொங்கல் பரிசு தொகுப்பை, எந்த தேதியில், எப்போது சென்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விபரங்கள், டோக்கனில் இடம் பெற்றுள்ளன.