/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர்ந்தது தக்காளி விலை கிலோ ரூ.70க்கு விற்பனை
/
உயர்ந்தது தக்காளி விலை கிலோ ரூ.70க்கு விற்பனை
ADDED : டிச 09, 2024 07:11 AM

கோவை : கோவைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
கோவைக்கு தக்காளி, தொண்டாமுத்துார், ஆலாந்துறை, பொள்ளாச்சி, உடுமலை மற்றும் ஊட்டியில் இருந்தும், மைசூரில் இருந்தும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து, புயல் காரணமாக மழை பெய்து வருவதால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி அளவு குறைந்துள்ளது.
கோவை மொத்த மார்க்கெட்டில், ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கும் சில்லரை விலையில், கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எம்.ஜி.ஆர்., மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ''சமீபத்தில் பெய்த மழைதான், தக்காளி விலை உயர்வுக்கு காரணம். தக்காளி மட்டுமல்ல, கத்தரி, வெண்டை, முருங்கை, உள்ளிட்ட பல காய்களின் விலை உயர்ந்துள்ளது. தக்காளியை பொறுத்தமட்டில் இந்த மாதம் இறுதிக்குள் விலை குறைந்து விடும்,'' என்றார்.