UPDATED : செப் 02, 2026 08:49 PM
ADDED : செப் 02, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவில் மற்றும் நவ பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த மாத விழா நாளை (4ம் தேதி) நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு வேள்வி யாகம், கோ பூஜை, அஸ்வ பூஜை, சுவான பூஜை நடைபெறுகிறது.
மதுரை அருகே அழகர் மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இயற்கை சுனையான நூபுர கங்கை தீர்த்தத்தால் அபிஷேக பூஜை நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற கோவில் கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
