/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை சிறப்பு கடன் கண்காட்சி முகாம்
/
நாளை சிறப்பு கடன் கண்காட்சி முகாம்
ADDED : செப் 20, 2024 10:28 PM
கோவை : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி வீடு, கார், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வகையில், 'கிரெடிட் எக்ஸ்போ' என்னும் சிறப்பு கடன் வழங்கும் கண்காட்சியை, நாளை நடத்துகிறது.
வெரைட்டி ஹால் சாலையில், இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி அலுவலகத்தில், கடன் கண்காட்சி நடக்கிறது.
இக்கண்காட்சியில், வீட்டுக்கடன் திட்டத்தில் 8.5 சதவீத வட்டி விகிதத்திலும், நான்கு சக்கர வாகனக்கடன் 8.70 சதவீத வட்டி விகிதத்திலும், வியாபாரக்கடன் 8.50 சதவீத வட்டி விகிதத்திலும் அனைவரும் பெற முடியும்.
கல்விக்கடன், தங்க நகைக்கடன், மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான கடன், வர்த்தகக்கடன், அடமானக்கடன் உள்ளிட்டவற்றையும், இக்கண்காட்சியில் சுலபமாக பெறலாம்.
பரிசீலனைக்கட்டணம் இல்லை. குறைக்கப்பட்ட வட்டி விகிதம், விரைவான சேவை உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் இக்கண்காட்சி நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.