ADDED : ஆக 18, 2025 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டணத்தில் 20ம் தேதி (நாளை) காலை, 9:30 முதல் மாலை, 4:00 மணி வரை பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு, பகவதி அம்மன் கல்யாண மண்டபத்தில், சிறப்பு முகாம் நடக்கிறது.
முகாமில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, வேளாண்துறை உள்ளிட்ட, 17 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெற வருவாய்த் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

