தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேலான தலைவர் ‘விநாயகர்’ ஆன்மிக பேச்சாளர் விளக்கம்

மேலான தலைவர் ‘விநாயகர்’ ஆன்மிக பேச்சாளர் விளக்கம்

மேலான தலைவர் ‘விநாயகர்’ ஆன்மிக பேச்சாளர் விளக்கம்


ADDED : செப் 16, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரோடு, கணேசபுரத்தில் உள்ள ராஜகணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி திருவிழா நடந்தது. இதில் ‘ஆன்மீக வளர்ச்சியில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் ஆன்மிக பேச்சாளர் விவேகானந்தன் பேசியதாவது:

விநாயகர் உருவம் எப்போதும், நம் அகத்திலேயே இருக்க வேண்டும். இதனால் ஆணவம், பேராசை உட்பட அனைத்து தீய குணங்களும் இல்லாமல், நல்ல மனிதராக விளங்குவோம்.

தோப்புக்கரணம் போடுவதால், குண்டலினி சக்தி தலையில் ஏறும். தலையில் கொட்டுவதால், அவை உடல் முழுவதும் பரவும். விநாயகரின் காது பிரணவ மந்திரம், அதாவது, பிறர் பேசுவதை நாம் கவனத்துடன் கேட்க வேண்டும். நாம் அதிகம் பேசக்கூடாது. வயிறு பிரம்ம சொரூபம், முகம் விஷ்ணு சொரூபம், இடது கரம் சக்தியின் சொரூபம், வலது கரம் சூரியனின் சொரூபம். இவையே விநாயகரின் பெருமை.

விநாயகர் கையில் தாமரையை வைத்திருப்பது தூய்மையின் அடையாளம். பாசக்கயிறு மன கட்டுப்பாட்டை குறிக்கும். ஞானத்தால் கிடைத்த பலனே மோதகம். அதாவது மனித மனத்தை நல்வழிப்படுத்தும் வழியாகும். விநாயகர் என்றால், மேலான தலைவன் என்று அர்த்தம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us