தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுற்றுலாத்துறை இணையதளம் புதுப்பிப்பு

 சுற்றுலாத்துறை இணையதளம் புதுப்பிப்பு

 சுற்றுலாத்துறை இணையதளம் புதுப்பிப்பு


ADDED : செப் 28, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 04:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தமிழக சுற்றுலாத்துறையின் இணையதளம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் துவக்க நிகழ்ச்சி கோவை ரெசிடென்சி ஓட்டலில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். துறை இயக்குனர் ராஜகோபால் சுன்கரா, கலெக்டர் பவன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ராஜகோபால் சுன்கரா பேசுகையில், ''தமிழகத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மாவட்டத்தில், கோவை இரண்டாம் இடத்தில் உள்ளது. தொழில்துறை மட்டுமல்லாமல் சுற்றுலாவும் கோவையின் அடையாளமாக மாறும். நீலகிரி, வால்பாறைக்கான நுழைவாக கோவை உள்ளது. சுற்றுலாத்துறை இணையதளம், கடந்த 5 ஆண்டுகளாக மேம்படுத்தவில்லை. அதை தற்போதைய காலத்துக்கேற்ப புதுப்பித்துள்ளோம். மகாபலிபுரத்தில் 9 டிக்கெட் கவுன்டர் உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக டிக்கெட் வாங்க வேண்டும். அதை இனி மொத்தமாக ஒரே இடத்தில் முன்பதிவு செய்யலாம்,'' என்றார்.

அமைச்சர் ராஜேஷ்குமார் பேசியதாவது:

நிறைய கல்லூரிகளில் சுற்றுலாத்துறையை பாடமாக படிக்கிறார்கள். அவர்களுக்கு சுற்றுலாத்துறையுடன் இணைந்து பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் வாயிலாக, மாணவர்களை துறைக்குள் கொண்டு வந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவோம்.மத்திய அரசின் உதவியுடன் மகாபலிபுரத்தை ரூ.200 கோடியில் மேம்படுத்தவுள்ளோம். எல்லா மாவட்டங்களிலும் நேரடியாக கள ஆய்வு செய்து தேவையான சுற்றுலா திட்டத்தை கொண்டு வருவோம். தொழில்துறையுடன் சுற்றுலாத்துறையை இணைத்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us