/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புரூக்பீல்ட்ஸ் மாலில் சுற்றுலா கண்காட்சி
/
புரூக்பீல்ட்ஸ் மாலில் சுற்றுலா கண்காட்சி
ADDED : ஆக 24, 2024 11:04 PM
கோவை:இந்தியா இன்டர்நேசனல் டிராவல் எக்சிபிஷன் ( ஐ.ஐ.டி.இ.,)., முதல் முறையாக, சர்வதேச பயணம் மற்றும் சுற்றுலா கண்காட்சியை, கோவை புரூக்பீல்ட்ஸ் மாலில் நடத்துகிறது.
ஐ.ஐ.டி.இ., என்பது, பயணம், சுற்றுலா, ரயில்வே, விருந்தோம்பல் தொடர்புடையவற்றில் சிறந்தவற்றை காண்பிக்கும் முதன்மையான நிகழ்வாகும்.
நேற்று துவங்கிய கண்காட்சியில், சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் மற்றும் தொடர்புடைய சேவைகள், தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா ஆபரேட்டர்கள் மற்றும் சேவை வழங்குனர்களை அறிந்துகொள்ள முடியும்.
குஜராத், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் போன்ற மாநில சுற்றுலா துறைகள், தங்கள் சுற்றுலா திட்டங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். பூட்டான், நேபாளம், தாய்லாந்து போன்ற நாடுகளின் சர்வதேச சுற்றுலா தொகுப்பையும் பார்க்கலாம்.
கண்காட்சியை, காலை, 11:00 முதல் இரவு, 7:00 மணி வரை, பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.

