தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்


UPDATED : அக் 11, 2026 07:24 PM

ADDED : அக் 11, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 07:24 PM ADDED : அக் 11, 2026 07:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: ஆழியாறு கவியருவி அருகே மலைப்பாதையில், 50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம் சீலாபாடி பகுதியைச் சேர்ந்த, ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என, 36 பேர் நேற்று முன்தினம் வால்பாறைக்கு வேனில் சுற்றுலா சென்று விட்டு, மீண்டும் திண்டுக்கல்லுக்கு திரும்பினர்.

அட்டகட்டி அருகே வந்த போது, வேனில் சரியாக பிரேக் பிடிக்க வில்லை என, கூறி டிரைவர் மணிகண்டன், 31, வாகனத்தை நிறுத்தினார். மேலும், சிறிது நேரம் கழித்து வாகனத்தை எடுத்து வருவதாக பயணிகளிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஒரு சிலர் அரசு பஸ்சில் பயணித்தனர்.

வேன் டிரைவருடன், தினேஷ்,- 21, சுபாகர்,- 18, ஹாரி, - 20, சந்தோஷ், - 21, பார்த்தசாரதி, 19 என, 5 பேரும், வேனில் ஆழியாறு கவியருவி அருகே வந்தபோது வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதிலிருந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆழியார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us