/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனிமூட்டத்தால் சுற்றுலா பயணியர் குஷி
/
பனிமூட்டத்தால் சுற்றுலா பயணியர் குஷி
ADDED : நவ 19, 2024 08:03 PM

சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறையை அடிக்கடி சூழ்ந்து படரும் பனிமூட்டத்தை சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.
வால்பாறையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்கிறது. தற்போது, வெயில் நிலவும் நிலையில், இடையிடையே சாரல்மழை பெய்து வருவதால், எஸ்டேட் பகுதியில் பரவலாக பனிமூட்டம் நிலவுகிறது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வால்பாறையில் இரவு நேரத்தில் கடுங்குளிரும், பகல் நேரத்தில் பனிமூட்டமும் நிலவுகிறது. தற்போது குளுகுளு சீசன் நிலவும் நிலையில், வால்பாறையில் படரும் பனிமூட்டத்தை சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசிப்பதோடு, 'செல்பி' எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதேபோன்று, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் காலை, மாலை நேரத்தில் பனிமூட்டம் சூழ்ந்து, குளுகுழு சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
- நிருபர் குழு -