/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை
/
மழையால் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை
மழையால் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை
மழையால் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை
ADDED : டிச 03, 2024 06:27 AM

வால்பாறை; வால்பாறையில் பரவலாக மழை பெய்யும் நிலையில், நீர்வீழ்ச்சிகளில் குளிக்க சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில், வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்கிறது. இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பரவலாக சாரல்மழை பெய்கிறது. இதனால், இங்குள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல், வால்பாறையில் இருந்து, சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும், சுற்றுலா பயணியர் குளிக்க கேரள மாநில வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வால்பாறை மற்றும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், இருமாநில சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வால்பாறையில் பரவலாக பெய்யும் மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 142.59 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 172 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 371 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.