தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வால்பாறையில் திரண்ட சுற்றுலா பயணியரால் நெரிசல்

 வால்பாறையில் திரண்ட சுற்றுலா பயணியரால் நெரிசல்

 வால்பாறையில் திரண்ட சுற்றுலா பயணியரால் நெரிசல்


ADDED : ஜன 17, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறையில், பொங்கல் விடுமுறைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணி யர் திரண்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவை மாவட்டம், சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட்,சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட் சி முனை, சின்னக்கல்லாறு அருவி, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணியர் கூட்டம் நேற்று இரண்டாவ து நாளாக அலைமோதியது.

ஆழியாறு வழியாக வால்பாறை வரும் மலைப்பாதையில், வரையாடு, சிங்கவால் குரங்குகள், யானைகள், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளை நேரில் கண்டு ரசித்தனர். சமவெளி பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், வால்பாறை மலைப்பகுதியில், ரம்மியமான சீதோஷ்ண நிலை நிலவுவதால், ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணியர் வந்துள்ளனர்.

இதனால் வால்பாறை நகர் மற்றும் சுற்றுலா தலங்களில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல, கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இங்கு, பொங்கல் விடுமுறையையொட்டி, சுற்றுலாப்பயணியரின் வருகை அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களில் மட்டும், 6,850 பேர் வருகை தந்துள்ளனர்.

காற்றில் பறந்த கோர்ட் உத்தரவு சுற்றுலா பயணியர், 2025 நவ., 1 முதல் இ - பாஸ் பெற்று தான், வால்பாறை வர வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதற்காக, ஆழியாறு, கேரள மாநில எல்லை யான சோலையாறு வனத்துறை சோதனை சாவடிகளில், இ- பாஸ் பெற வசதியாக, தனி கவுன்டர் அமைக்கப்பட்டது. சில நாட்களாக, சோதனை சாவடிகளில் எந்தவித சோதனையும் இன்றி, வாகனங்கள் வால்பாறை செல்ல, வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். கோர்ட் உத்தரவு காற்றில் பறப்பதால், இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us