/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சுற்றுலா பயணியர் கோரிக்கை
/
அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சுற்றுலா பயணியர் கோரிக்கை
அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சுற்றுலா பயணியர் கோரிக்கை
அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சுற்றுலா பயணியர் கோரிக்கை
ADDED : ஜன 16, 2026 05:50 AM
வால்பாறை: சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என, வனத்துறைக்கு சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களில், ஆழியாறு, கவியருவி, அட்டகட்டி வியூபாயின்ட், ஆர்கிட்டோரியம், டைகர்வேலி, சின்னக்கல்லார் அருவி, நல்லமுடி காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன. இந்த இடங்களை சுற்றி பார்க்க சுற்றுலா பயணியரிடம் வனத்துறையினர் கட்டணம் வசூலிக்கின்றனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணியர் அதிகளவில் சென்று வரும் நல்லமுடி காட்சி முனை, தலநார் வியூ பாயின்ட், சின்னக்கல்லாறு உள்ளிட்ட இடங்களில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால், சுற்றுலாபயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து, சுற்றுலா பயணியர் கூறியதாவது:
வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆர்வத்துடன் வருகிறோம். ஆனால், வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக, ரோடு, கழிப்பிடம், உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. சுற்றுலா பயணியர் வருகையை அதிகரிக்கும் வகையில் வனத்துறை சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

