/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
/
அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
ADDED : செப் 16, 2025 09:56 PM

வால்பாறை; வால்பாறையில், ஆறு, அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால், சுற்றுலா பயணியர் கண்டு ரசித்து மட்டும் செல்கின்றனர்.
வால்பாறையில் கடந்த ஒரு வாரமாக சாரல்மழை பெய்கிறது. இருப்பினும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அருவியிலும் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதித்துள்ளது. இதனால், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் சிற்றருவி, பிர்லா அருவி உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணியர் அருகில் நின்றபடி ரசித்து சென்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்தாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து குறையாமல் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சுற்றுலா பயணியர் 'செல்பி' எடுப்பதையும், உயரமான இடத்தில் இருந்து வீடியோ எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பு கருதி, வால்பாறையில் ஆறு மற்றும் அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,' என்றனர்.