/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகருக்குள் கடமான் விசிட் சுற்றுலா பயணியர் ரசிப்பு
/
நகருக்குள் கடமான் விசிட் சுற்றுலா பயணியர் ரசிப்பு
ADDED : நவ 22, 2024 11:00 PM

வால்பாறை: வால்பாறை பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு விசிட் செய்த கடமானை சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களில், யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, வரையாடு, சிங்கவால்குரங்குகள், மான்கள் அதிகம் உள்ளன. இந்நிலையில், வால்பாறை பஸ் ஸ்டாண்ட் ரோட்டில், கடமான் ஒன்று நேற்று உலா வந்தது. சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் மானை கண்டு ரசித்ததுடன் 'செல்பி' எடுத்தும் மகிழ்ந்தனர். இதையடுத்து, ஸ்டேன்மோர் வனப்பகுதிக்குள் மான் சென்றது.
வனத்துறையினர் கூறியதாவது, 'சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறையில் வனவிலங்குகளின் வெளியில் உலா வர துவங்கியுள்ளன. குறிப்பாக, பகல் நேரத்தில் தேயிலை காட்டில் உலா வரும், யானை, காட்டுமாடு, மான் போன்ற வனவிலங்குகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது.
வன விலங்குகள் நடமாடும் பகுதிக்கு சென்று அவற்றை துன்புறுத்தவோ, விரட்டவோ கூடாது. குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வந்தால், வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.