/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவியருவியில் அடிப்படை வசதிகள் தேவை; சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
/
கவியருவியில் அடிப்படை வசதிகள் தேவை; சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
கவியருவியில் அடிப்படை வசதிகள் தேவை; சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
கவியருவியில் அடிப்படை வசதிகள் தேவை; சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 07, 2026 05:40 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆழியாறு கவியருவியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் அமைந்துள்ளது ஆழியாறு கவியருவி. இந்த அருவிக்கு மேற்குத்தொடர்ச்சிமலையில் பெய்யும் மழை காரணமாக நீர் வரத்து உள்ளது. இயற்கையாக கொட்டும் அருவியில் குளித்து மகிழ பல்வேறு பகுதியிலிருந்தும் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கவியருவியில் போதிய வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தடுப்பு சேதம் கவியருவியில் குளித்து மகிழும் இடத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன. அவை கடந்தாண்டு பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, அடித்து செல்லப்பட்டன.
இதனால், தற்காலிகமாக மரக்கட்டைகளை வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. குளிக்கும் போது, சுற்றுலா பயணியர் வழுக்கி விழுவதும் தொடர்கதையாகியுள்ளது.
சிலருக்கு காயம், எலும்பில் அடிபடுதல் உள்ளிட்ட சம்பவங்களால் அச்சத்துடன் குளிக்கும் நிலை உள்ளது.மேலும், கழிப்பிடம், உடைமாற்றும் அறை பராமரிப்பு மேற்கொள்ளப்படாமல் உள்ளதால் சிரமப்படுகின்றனர்.
சுற்றுலா பயணியர் கூறுகையில்,'கவியருவியில் இயற்கையாக கொட்டும் நீரில் குளித்து மகிழ ஆசையாக உள்ளது. இங்கு போதிய வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
கவியருவிக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை கொண்டு இங்கு வசதிகளை மேம்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அருவியில் உருண்டு வரும் பெரிய கற்களால், இரும்பு தடுப்புகள் சேதமடைந்தன. இந்நிலையில், சுற்றுலா பயணியர் வசதிக்காக கவியருவியில் வசதிகளை மேம்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்ததும் பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.

