/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவியருவியில் திரண்ட சுற்றுலாப்பயணியர்
/
கவியருவியில் திரண்ட சுற்றுலாப்பயணியர்
ADDED : அக் 21, 2025 10:34 PM

பொள்ளாச்சி: தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக ஆழியாறு அணையில் சுற்றுலாப்பயணியர் திரண்டனர். கவியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு, ஆழியாறு அணை, பூங்கா, கவியருவி என சுற்றுலாத்தலங்கள் உள்ளன.
இதனால், உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டிதொடர்விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணியர் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், நேற்றுமுன்தினமும், நேற்றும்சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன், ஆழியாறு அணைப்பகுதியில் திரண்டனர்.
அணை அழகை ரசித்த சுற்றுலாப்பயணியர், கவியருவியில் குளித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் அருவியின் முன்பு குளம் போல தேங்கிய தண்ணீரில் சறுக்கு விளையாடினர்.
சுற்றுலாப்பயணியர் கூட்டத்தால் ஆழியாறு அணைப்பகுதி திருவிழாக்கோலம் பூண்டது.