/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா பயணியர் குப்பை குவிப்பு: கூழாங்கல் ஆற்றில் சுகாதார சீர்கேடு
/
சுற்றுலா பயணியர் குப்பை குவிப்பு: கூழாங்கல் ஆற்றில் சுகாதார சீர்கேடு
சுற்றுலா பயணியர் குப்பை குவிப்பு: கூழாங்கல் ஆற்றில் சுகாதார சீர்கேடு
சுற்றுலா பயணியர் குப்பை குவிப்பு: கூழாங்கல் ஆற்றில் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 11, 2025 10:26 PM

வால்பாறை: வால்பாறையில் சுற்றுலா பயணியர் ரோட்டில் குப்பையை வீசி செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.
வால்பாறையில் மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகரை சுகாதாரமான முறையில் மாற்றியமைக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் குப்பை உள்ளிட்ட கழிவுகளை திறந்தவெளியில் வீசி செல்கின்றனர்.
குறிப்பாக, சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் உள்ள கடைகளில் வெளியாகும் கழிவுகள் திறந்தவெளியில் வீசப்படுவதாலும், உணவு சாப்பிட்ட பின் பிளாஸ்டிக் டம்ளர், தட்டு உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணியர் சாலையோரம் வீசி செல்வதாலும் இப்பகுதியில் சுகாதாரம் பாதித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் குளிக்க செல்கின்றனர். அங்குள்ள கடைகளில் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்ட பின் கழிவுகளை சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால், அங்கு துர்நாற்றம் வீசுகிறது.
ரோட்டில் தேங்கி கிடக்கும் குப்பையை தினமும் அகற்ற வேண்டும். திறந்தவெளியில் குப்பை குவிப்பதை தவிர்க்க நகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை சுற்றுலா பயணியர் முற்றிலும் தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில் குப்பை உள்ளிட்ட கழிவுகளை வீசுவதை தவிர்க்க வேண்டும்.
நகராட்சி சார்பில், குப்பைகள் கொட்ட தொட்டி விரைவில் வைக்கப்படும். வால்பாறையை சுகாதாரமான நகராட்சியாக மாற்ற சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.

