/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பார்க்கிங்' வசதியின்றி சுற்றுலா பயணியர் அவதி
/
'பார்க்கிங்' வசதியின்றி சுற்றுலா பயணியர் அவதி
ADDED : அக் 26, 2025 11:27 PM

வால்பாறை: வால்பாறை நகரில் 'பார்க்கிங்' வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறையில் குடும்பத்துடன், சுற்றுலா வாகனங்களில் வருகின்றனர். ஆனால், வால்பாறையில் 'பார்க்கிங்' வசதி இல்லாததால், ரோட்டில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உள்ளூர் மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சுற்றுலா பயணியர் கூறுகையில், 'வால்பாறையில் சுற்றுலா வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய இடவசதி இல்லாததால், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துகிறோம். இது போன்ற சூழ்நிலையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.

