ADDED : செப் 24, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
உடுமலை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் முன், உடுமலை தாலுகா பொதுத்தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தாலுகா தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்டச்செயலாளர் ரங்கராஜ், துணைச்செயலாளர் ஜெகதீசன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் கனகராஜ் ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கான நல வாரிய உதவித்தொகை வழங்காமல், விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கும் முறையை தொழிலாளர் நலத்துறையினர் கைவிட வேண்டும். நலவாரிய உதவித்தொகை மற்றும் நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
