ஷிப்ட் முறையில் மாற்றம் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
ஷிப்ட் முறையில் மாற்றம் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 08, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மண்டல அரசுப் போக்குவரத்து கழக நிர்வாகம், பஸ் இயக்க 'ஷிப்ட்' முறைகளில் கொண்டு வந்துள்ள மாற்றத்துக்கு, போக்குவரத்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவை சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., எம்.எல்.எப்., உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, அரசு போக்குவரத்து கழக கோவை மேலாண்மை இயக்குனர் மற்றும் பொதுமேலாளர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளது.
அதில், 'புறநகர் மற்றும் தொலைதுார பஸ்களில் பணிபுரியும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தொடர்ந்து பகல் மற்றும் இரவு முழுவதும் முழுமையாகப் பணிபுரிய வேண்டும் என்று வற்புறுத்துவது நியாயமற்றது. தொழிலாளர்களின் நலன் கருதி இந்த நடைமுறையை கைவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
