பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 23, 2026 07:11 PM
வால்பாறை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு மின்சார வாரியம், காடம்பாறை மின்பாறை மேற்பொறியாளர் அலுவலகத்தின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மின் ஊழிய மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு., திட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் திட்டச்செயலாளர் ஜீவானந்தம், துணைத்தலைவர்கள் குபேந்திரன், திருக்குமரன் உட்பட பலர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் காடம்பாறை நீர் உற்பத்தி வட்டத்தில், நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு வாரியமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், அட்டகட்டி, காடம்பாறை, அப்பர்ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த ஒப்பந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
