/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம்
/
மாட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம்
ADDED : டிச 31, 2025 07:52 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில், 6 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாட்டுச்சந்தை புகழ்பெற்றது. இச்சந்தை பொள்ளாச்சி - ஆனைமலை ரோட்டில் செயல்படுகிறது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து, மாடுகளை சந்தைக்கு கொண்டு வருவர்.
பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில், வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் வர்த்தகம் நடைபெறும். சந்தை நாளன்று, மாடுகள் அதிக அளவில் கொண்டு வரப்படும்.
இந்த வாரத்திற்கு, நேற்று நடந்த சந்தையில், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்பட்டன. புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வரவிருப்பதால் வரத்து அதிகமாக இருந்தது.
இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
நாட்டுப்பசு, 45 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையும், காங்கயம் காளை, 75 முதல் 80 ஆயிரம் வரையும், ஜெர்சி வகை, 35 முதல் 40 ஆயிரமும், நாட்டு எருமை, 55 முதல் 60 ஆயிரமும், மொரா வகை 80 முதல் 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தமாக, 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

