/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலப்பட தேயிலை விற்ற வியாபாரிக்கு சிறை
/
கலப்பட தேயிலை விற்ற வியாபாரிக்கு சிறை
ADDED : நவ 13, 2025 01:04 AM
கோவை: கணபதி, ராஜிவ்காந்தி சாலையை சேர்ந்தவர் புவனேஸ்வரன்,55; தேயிலை வியாபாரி. இவர், மொத்தமாக தேயிலை வாங்கி, கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். தேயிலையில் கலப்படம் கலந்து விற்பதாக புகார் வந்தது.
அதன் பேரில், கோவை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் , அவரது வீட்டில் சோதனை நடத்தி, தேயிலை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். அப்போது, தேயிலையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப்பட பொருட்களை கலந்து விற்றது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிந்து, கோவை ஜே.எம்:2, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த மாஜிஸ்திரேட் அப்துல்ரஹ்மான், குற்றம் சாட்டப்பட்ட புவனேஸ்வரனுக்கு 6 மாதம் சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் மலர்கொடி ஆஜரானார்.

