UPDATED : அக் 12, 2026 09:16 PM
ADDED : அக் 12, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், உக்கடம், ராமர்கோவில் வீதி மாநகராட்சி அனைத்து காய்கறி மார்க்கெட் முன்பு நேற்று வணிகர்கள் போராட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்ட தலைவர் இருதயராஜா தலைமை வகித்தார்.
யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கான வரியை நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்து நோட்டீஸ் விநியோகித்தனர். மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக, நேற்று பேட்ஜ் அணிந்து வேலை பார்த்தனர்.
